பிடித்தவை 10 - செங்கவின், கவிஞர், செயற்பாட்டாளர்


பொள்ளாச்சியை அடுத்துள்ள தென்சங்கம்பாளையம் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றும் செங்கவின் ஒரு கவிஞரும் கூட.

மிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் கிடைத்த இலக்கிய அறிமுகமே கவிஞராவதற்கான முதல் விதை. ‘களையெடுப்பின் இசைக்குறிப்பு’ என்கிற இவரது கவிதைத் தொகுப்பு, அண்மையில் தேனி தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் ’இன்குலாப் படைப்பூக்க’ விருதைப் பெற்றுள்ளது. கவிஞராகவும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிரான செயற்பாட்டாளராகவும் இயங்கிவரும் செங்கவின் தனக்குப் பிடித்த பத்து விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டதன் தொகுப்பு...

ஆளுமை: திருவள்ளுவர். உலக மக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கைக் கருத்துக்களை சொன்னவர்.  அதேநேரம்,

‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

x