திமுக மாநாட்டில் ஆழ்வார் பாசுரங்கள் பாடியதில் என்ன தவறு?- சுப்புலட்சுமி ஜெகதீசன் சுரீர்!


திமுக-வின் ஈரோடு மண்டல மாநாட்டைத் தனது தலைமையில் நடத்திய பெருமிதத்தில் இருக்கிறார் திமுக-வின் துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன். முக்கிய அரசியல் கட்சிகள் இப்படி பெண்கள் தலைமையில் மாநாடு கூட்டிய மரபு இதற்கு முன்பு உண்டா? என்ற கேள்வியோடு அவரைச் சந்தித்தேன்.

 “நானறிஞ்சு இல்லை கண்ணு. அய்யா பெரியார் காலத்தில் ஒருமுறை திராவிடர் கழக மாநாடு குஞ்சிதபாதம் அம்மையார் தலைமையில் நடந்திருக்கு!” என்றபடியே எனது அடுத்தடுத்த கேள்விகளையும் எதிர்க்கொள்ளத் தயாரானார்.

கோஷ்டிப் பூசல்களை சமாளிக்கவே எந்தக் கோஷ்டியிலும் சேராத உங்களை மாநாட்டுத் தலைமையாகப் போட்டதாகச் சொல்கிறார்களே..?

அப்படி இல்லைங்க... நீங்க தலைமையேத்து நடத்துறதுதான் சரியா இருக்குமுன்னு ஸ்டாலின்கிட்ட சொன்னேன். அவர், ‘உங்க மண்டலத்தின் மாநாடு, சீனியர் நீங்கதான் தலைமை ஏற்க வேணும்’னு சொல்லிட்டாருங்க. தட்ட முடியலை, தலைமை ஏற்றேன்.

x