‘வாட்ஸ் அப்’ பில் வந்த அந்த இரண்டு போட்டோக்களைப் பார்த்ததும் மஹிமாவின் இருதயம் ஒரு பந்தயக் குதிரையாய் மாறியது.
இரண்டாவது போட்டோவில் ஃப்ரீஸர் பாக்ஸும் அந்த பாக்ஸுக்குள் படுக்க வைக்கப்பட்டிருந்த அவளுடைய உடலும் ஒரு ராட்சஸ பேனராய் மாறிக் கண்களில் கலவரத்தை நிரப்பின.
மஹிமாவுக்கு எதிரில் உட்கார்ந்திருந்த கெளசிக்கும் தியானேஷும் அவளைப் பார்த்துவிட்டு லேசாய் முகம் மாறினார்கள். கெளசிக் கேட்டார்:
‘‘என்னம்மா... போன்ல ஏதாவது மோசமான செய்தியா?’’