‘கலர்ஸ் டி.வி’யில் ஒளிப்பரப்பாகும் ஆர்யாவின் சுயம்வர நிகழ்ச்சியான, ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சிக்குத் தடைவிதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார் ஜானகியம்மாள்.
தேடிச்சென்றபோது ஆச்சரியம் காத்திருந்தது. வழக்குத் தொடுத்திருக்கும் ஜானகியம்மாளுக்கு வயது 50.
சொந்த வீடுகூட இல்லாத ஏழை. கணவரை இழந்த இவர், ஆதரவற்றோர் உதவித்தொகை மூலம் வாழ்க்கையை கர்த்துகிறார். மதுரை அரசு மருத்துவமனை சாலையில், பழுதடைந்த தனது பழவண்டிக் கடையை சரி செய்யும் முனைப்பில் இருந்தவரைச் சந்தித்ததும், “நீங்களும் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறீங்களா?” என்று ஆச்சரியமாகக் கேட்டோம்.
சிரித்தவர், “நான் தென் மாவட்ட பெண்கள் கூட்டமைப்பில் உறுப்பினரா இருக்கேன்பா. மத்த பெண்கள் மாதிரி, டிவி சீரியல் பார்க்கிற பழக்கம் கெடையாது. ஆனா, பொது வாழ்க்கையில இருக்கிறதால நிறைய பேரோடு பேசுவேன். அப்ப எங்க ஏரியா பொண்ணுங்கதான் சொன்னாங்க, ‘ச்சே, அந்த நிகழ்ச்சி ரொம்ப மோசம். கல்யாணம் பண்ணிக்கிறேங்கிற பேர்ல 18 பெண்களை வெச்சி கேவலப்படுத்தறாரு ஆர்யா.