சொட்டாங்கல்: தமிழச்சி தங்கபாண்டியன்


காக்காப்பொன்னு!

“சன்மைக்கா ஒட்டுனாப் போதும். சக்குன்னு நிக்கும்” ராமரின் இழுத்த குரலுக்கு எட்டிப்பார்த்தேன்.

“சுளுவா சொல்லிப்புட்ட ராமரு. ஏலவே ஒட்டுனதப் பிய்க்கணும்ல” - மேட்டுத்தெரு ஆசாரி வெத்தல துப்பும் சத்தத்துடன் மைக்கா சீட்டுகளை நிமித்திக் கொண்டிருந்தார்.

“நம்ம காக்காப்பொன்னு கணக்கா அச்சா இருக்கு இந்த டிசைனு“ என்ற அவரது அவதானிப்பில் கதிரேசன் நெனப்புக்கு வந்தான்.

x