பாஜகவுக்கு உதவுமா மூன்றாவது அணி?


பாஜக. அல்லாத, காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் கூட்டணி ஒன்றை உருவாக்க வேண்டும் என்று தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் விடுத்த அறைகூவல் பல்வேறு கட்சிகளின் தலைவர்களின் ஆதரவைப் பெற்றுவருகிறது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அண்மையில் அவரை சந்தித்துப் பேசியதையொட்டி மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளராக மம்தா முன்னிறுத்தப்படலாம் என்ற யூகங்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளன.

சந்திரசேகர ராவின் இந்த அழைப்பு உத்தரப் பிரதேச, பிஹார் இடைத்தேர்தல்களில் பாஜகவும் காங்கிரசும் அடைந்த படுதோல்விகளுக்குப் பிறகு ஏற்பட்ட உற்சாகத்தில் எழுந்துள்ளதை நாம் கவனிக்க வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக தோல்வி அடைந்தது. அந்தத் தொகுதிகளில் ஆறு சதவீதமாக இருந்த காங்கிரஸின் வாக்கு மூன்று சதவீதமாகக் குறைந்ததோடு அக்கட்சி டெபாசிட்டையும் இழந்தது. பாஜகவுக்கான மாற்று காங்கிரஸ் அல்ல என்பதான தோற்றத்தை இது ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் இல்லாத இந்தியா?

இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களைத் தனியாகவோ, கூட்டணிக் கட்சிகளின் துணையோடோ பாஜக ஆட்சி செய்துவருகிறது. இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள கர்நாடக மாநிலத் தேர்தலிலும் எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என அது முயற்சித்துவருகிறது.

x