‘செயல் புகழ்’ சேகர் பாபு
சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சேகர் பாபு சொந்த வேலையாகப் போனால்கூட செயல் தலைவர் ஸ்டாலினிடம் சொல்லிவிட்டுத்தான் போகிறாராம் (தாய்க் கழகத்துப் பழக்கமோ!). அவரது இந்த ஓவர் பணிவை, சுற்றியிருக்கும் மற்ற நிர்வாகிகளிடம் சொல்லிச் சொல்லிப் பூரிக்கிறாராம் ஸ்டாலின். ‘நல்ல பேரை வாங்கிபுட்டேன் பிள்ளைகளே’ என்று சேகர் பாபுவும் புளகாங்கிதம் காட்ட... கட்சியின் மற்ற உயர் மட்ட நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பு.
நடராஜனும் முள்ளிவாய்க்கால் முற்றமும்
மறைந்த ம.நடராஜன் உடலை தஞ்சையில் உள்ளமுள்ளிவாய்க்கால் முற்றத்தில் அடக்கம் செய்யத்தான் முதலில் திட்டமிட்டார்களாம். “முற்றம் அனைவருக்கும் பொதுவான அடையாளம். நடராஜனுக்கு அங்கே இடமளித்தால் நாளை