சிதம்பரமும் சுப்பிரமணியன் சுவாமியும் லேசுப்பட்டவங்க இல்லை! - ‘தந்தி’ பாண்டே பேட்டி


சமூக வலைதளங்களில் ரங்கராஜ் பாண்டேவின் பேட்டிகள் விவாதங்களாகும் சூழல் மாறி இந்த வாரம் அவரே விவாதமானார். “செய்திகளைக் கையாள்வதில் நிர்வாகத்துக்கு முரணாகச் செயல்பட்டதால் ‘தந்தி டிவி’யின் தலைமைச் செய்தியாசிரியர் பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டார் பாண்டே” என்ற கதை வாட்ஸ் - அப் எங்கும் வட்டமடித்துக்கொண்டிருந்த சூழலில், பாண்டேவின் ஆதி கதையைத் அறிந்துகொள்ள அவரது இல்லத்தில் சந்தித்தேன்.

“சென்னையில கடந்த 13 வருசத்துல நான் மாறியிருக்கிற பத்தாவது வீடு இது. சொந்த வீடு இல்ல தலைவா... வாடகை வீடு” என்று சிரித்தபடியே வரவேற்றார். அப்படியே மனைவி கவிதாவிடம் இரண்டு காபிக்கு பணிவுடன் ஆர்டர் தந்துவிட்டு நிமிர்ந்தவர் தன் பூர்வீகத்திலிருந்தே தொடங்கினார்.

“அப்பா ரகுநாதாச்சார்யாவுக்கு பூர்வீகம் பிஹார். ஒட்டிப் பிறந்த உறவுகளோட அவருக்கு சின்னதா உரசல்.  ‘போங்கடா’னுட்டு இந்தப் பக்கம் வந்துட்டாரு. நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே ஸ்ரீவில்லிப்புத்தூரில்தான். பொண்ணு கட்டினது ஸ்ரீரங்கம்.”

எப்படி ஊடகத்துக்குள் வந்தீர்கள்?

x