யார் இட்ட தீ?


அழகான மலைப் பகுதி,பலருக்கும் ‘ஆபத்தான’ பகுதியாகிவிட்டது!

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் ஒரு பகுதியான தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத் தீயில், கருகியிருக்கின்றன எதிர்காலத்தின் பறவைகள் சில. ஈரோட்டிலிருந்து 12 பேர். சென்னையிலிருந்து 24 பேர் என மொத்தம் 36 பேர். அவர்களில் தீக்காயமடைந்து இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

மகளிர் தினத்தைக் கொண்டாடுவதற்காக, குரங்கணிக்கு நடையுலா (ட்ரெக்கிங்) சென்றிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள். சாகசத்தை விரும்பிச் சென்றவர்களுக்கு, பாதி வழியில் உயிருக்கே ஆபத்து வரும் என்று தெரிந்திருக்க சாத்தியமில்லை.

இப்போது, நடையுலாவை ஏற்பாடு செய்தவர்கள், வனத் துறையின் அடிமட்ட ஊழியர்கள், உள்ளூர் வழிகாட்டிகள் என எல்லோர் மீதும் குற்றம் சுமத்தப்படுகிறது. எங்கு, யார், என்ன தவறு செய்தார்கள்?

x