குவியமில்லா ஒரு காட்சிப்பேழை: மதன் கார்க்கி


வணக்கம்!

மிகச் சில நூல்களே வாசித்திருக்கிறேன். பள்ளி-கல்லூரி பாட நூல்கள், அம்மா, அப்பா, தம்பி எழுதிய நூல்கள் வாசித்திருக்கிறேன். தமிழ்வாணனின் சங்கர்லால் கதைகளை விரும்பிப் படித்திருக்கிறேன். சுஜாதா அவர்களின் ‘கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு' என்ற சிறுகதை என்னை கணினி-மொழி ஆராய்ச்சிக்கு ஆற்றுப்படுத்தியது. இந்நூல்களோடு மேலும் பத்து பதினைந்து நூல்கள் மட்டுமே வாசித்திருப்பேன்.

நூல்கள் வழி கற்பதை விட கேட்டல், பார்த்தல் மற்றும் அனுபவ வழியில் கற்பவன் நான். திரைப்பாடல்களாலும், திரைப்படங்களாலும், பயண அனுபவங்களாலும், சமூக வலைத்தளங்களாலும் செதுக்கப்பட்டவன் நான்.

இது போல் ஒரு தொடர் எழுதுவேன் என்று எண்ணிய தில்லை. இத்தொடர் குறித்த உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். நன்றி!

x