புதுச்சேரியையெல்லாம் பாஜக கனவு காண முடியாது!- முதல்வர் நாராயணசாமி நேர்காணல்...


பிரதமர் மோடியின் வருகை புதுச்சேரி அரசியலில் புதிய காய் நகர்த்தல்களை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரெங்கசாமியை பிரதமர் சந்தித்தது, அவரை டெல்லிக்கு அழைத்தது, ஆளுநர் கிரண்பேடி - ரெங்கசாமி சந்திப்பு...

இவை எல்லாம் ஏதோவொரு மாற்றத்துக்கான அறிகுறி என்ற பேச்சு அடிபடுகிறது. கூடவே எதிரும் புதிருமாக இருந்த முதல்வர் நாராயணசாமியும் கிரண்பேடியும் பூக்களைத் தூவி ஹோலி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதையும் ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள் புதுச்சேரி மக்கள். என்னதான் நடக்கிறது? முதல்வர் நாராயணசாமியிடமே  கேட்டேன்.

துணைநிலை ஆளுநருடனான உறவு சுமுகமாகியிருப்பதுபோல் தெரிகிறது, என்னதான் நடக்கிறது புதுச்சேரி அரசியலில்?

ஆமாம், சுமுகமாகியிருக்கிறோம். ஆனால், இது தொடர வேண்டும். திரும்ப சண்டைக்கு வரக்கூடாது. அப்போதுதான் நிர்வாகம் நன்கு நடக்கும்.

x