எந்நேரமும் தியானிப்பவர்கள்!


"நாங்கள் பார்வையற்றவர்கள் இல்லை,உலகத்தின் நிறபேதம் எதிர்த்துக்காணா விரதம் இருக்கிறோம்.கடவுள் உண்மையிலும் உண்மையாக கருவிழிகளை எங்களுத்தான் கொடுத்திருக்கிறார்.”

பார்வையற்றவர்களின் நிலையில் இருந்துஇப்படிப் பேசும் குட்டிக்குட்டியான 21 கவிதைகளைக் கொண்டிருக்கிறது அந்தக் கவிதை நூல். பார்வையற்றோர் படித்தறியும் விதமாக பிரெய்ல் எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ள ‘எந்நேரமும் தியானிப்பவர்கள்’ என்ற இந்த நூல்தான் உலகில் முதன்முதலாக, பார்வையற்றோருக்காக தமிழ் பிரெய்ல் முறையில் அச்சிடப்பட்ட கவிதைத் தொகுப்பு. லிம்கா சாதனைப் புத்தகம் இதனை அங்கீகரித்து சான்றிதழ் அளித்திருக்கிறது.

பார்வையற்றோருக்கான இக்கவிதைத் தொகுப்பை எழுதியிருப்பவர் புதுச்சேரியைச் சேர்ந்த, ‘பார்வையுடையவரான’ பல்மருத்துவர் தீபக்தாமஸ். “கவிதை மேல் கொண்ட காதலால் காதல் கவிதைகள் அடங்கிய‘இ(ச்).சி.ஜி’ என்னும் கவிதைத் தொகுப்பை முதலில் வெளியிட்டிருந்தேன். அதனைப் படித்த பார்வையற்ற அன்பர் ஒருவர் எங்களைப் பற்றியும் எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

என் தந்தை தாமஸ் மயிலாடுதுறையில் புகழ்பெற்ற கண் மருத்துவர். அதனால் பார்வையற்றவர்கள் மீது எனக்கு எப்போதும் அக்கறை அதிகம். அதனால் அவர்களை மனதில் கொண்டபோது ‘நாங்கள் பார்வையற்றவர்கள் இல்லை, எந்நேரமும் தியானிப்பவர்கள்’ என்ற ஒருவரிக் கவிதை மனதுக்குள் ஓடியது. அப்படியே தொடர்ந்து எழுதி ஒரு தொகுப்பாக்கினேன். அதனை பார்வையற்றவர்களும் படிக்க வேண்டும் என்ற ஆசையில் மதுரையில் உள்ள ‘இந்திய பார்வையற்றோர் சங்க’த்தை அணுகினேன். அவர்கள் என் முயற்சியைச் செயலாக்க உதவினார்கள்.

x