விஸ்வரூபம், 2.0: பட்டாசு கிளப்பும் வெப்பன் சப்ளையர்!


திரைப்படங்களில் மிரட்டுகிற குண்டுவெடிப்புக் காட்சிகள், துப்பாக்கி முழக்கம், குபீர் தீ, வெடித்துச் சிதறும் கார், புகை மண்டலம் போன்றவற்றை உருவாக்குவதற்கென்றே ஒரு ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் குழு இருக்கிறது. இந்தத் தொழிலில் இந்தியாவிலேயே புகழ்பெற்றது விஷால் தியாகியின் குடும்பம்.

'தேவ் டி', 'ரா ஒன்', 'வாண்டட்', 'சுல்தான்', 'ஃபேன்' போன்ற பிரபல இந்திப் படங்களுக்கு ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் செய்தது இவர்கள்தான். கமலின், ‘விஸ்வரூபம்’ படத்தில் மிரட்டியதும், ரஜினிகாந்த்தின் 2.0 படத்தில் மிரட்டிக் கொண்டிருப்பதும் விஷால் தியாகியின் குழுவே. அவர் தமிழ் இதழுக்காக கொடுத்த முதல் பேட்டி இது.

இந்தத் துறையை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?

என் தந்தை மகேந்திர தியாகி ஒரு நடிகர். அதையும் தாண்டி சீரான வருவாய்க்காகத் துப்பாக்கி வியாபாரம் செய்துவந்தவர். சினிமாவுக்கும் வெப்பன் சப்ளை செய்தவர்.

x