சிலைகள் உங்களை சும்மா விடாது


திரிபுரா தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, மக்களுக்காகப் போராடும் உறுதியோடு இருக்கிற கம்யூனிஸ்ட்டுகளை உடனடியாகக் களமிறங்கச் செய்வதாக, வெற்றி போதைக்கும்பல் இரண்டு லெனின் சிலைகளைத் தகர்த்த சம்பவங்கள் அமைந்துள்ளன.

அம்மாநில பாஜக தனக்கும் அக்கும்பலுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிக்கொண்டிருக்க, தமிழகத்தில் அக்கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச். ராஜா, “இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வே. ராமசாமி சிலை,” என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். பிறகு, மறுத்தார்.

ஹெச்.ராஜா பதிவின் தாக்கத்தில் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக, பெரியார் சிலை மீது இரண்டு பேர் கல்லெறிந்து அதன் மூக்கை உடைத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் நகர பாஜக தலைவர். அவரைக் கட்சியிலிருந்து நீக்கிய பாஜக தலைமை, ராஜா மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் அம்பேத்கர் சிலை உடைக்கப்படுகிறது. வங்கத்தில் பாஜக முன்னோடியான ஜனசங்கத்தின் தலைவர்களில் ஒருவரான சியாமா பிரசாத் முகர்ஜி சிலை சேதப்படுத்தப்படுகிறது.

x