இன்ஸ்டாகிராமில் பல இதயங்களை வென்ற புகைப்படம் இது. நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் லாஸ் ஏஞ்ஜல்ஸ் புலுவார்த் தெருவில் அமைந்திருக்கும் ஹாலிவுட் இயக்குநர் ‘குவென்டின் டாரன்டினோ’வின் ‘ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம்’ நட்சத்திரத்துடன் ஆசையாக எடுத்துக்கொண்ட படம்.
பொட்டுவைத்த முகமோ!
#GirlsWhoDrinkBeer, #NosePinTwitter போன்ற ஹேஷ்டேக்களைத் தொடர்ந்து ட்விட்டரில் சென்ற வாரம் #BindiTwitter என்ற ஹேஷ்டேக் வைரலானது. பல பெண்கள் நெற்றியில் பொட்டிட்டு செல்ஃபி எடுத்து ட்விட்டரிலும் இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்திருந்தனர்.