முன்கதைச் சுருக்கம்: மஹிமா அழகுப் பெண். மூளை பலசாலி. பிரபல கம்பெனி ஒன்றில் முக்கிய பொறுப்பில் இருப்பவள். துபாயில் இருக்கிற ‘அல்-அராபத் டெக்னாலஜீஸ்’ என்கிற கம்பெனியின் பல கோடி ரூபாய் கொட்டும் ஆர்டரைப் பெற பெருமுயற்சியும் பேருழைப்பையும் நல்கியவள்.
அந்த ஆர்டர் கிடைக்கப் பெரும் காரணமாக இருந்த மஹிமாவை கம்பெனியின் டைரக்டர் அழைத்து பாராட்டியதுடன், உடனடியாக துபாய்க்கு இரண்டு வாரம் டிரெயினிங்குக்குப் போக வேண்டும் என்கிறார். இரண்டு நாளில் யோசித்துவிட்டு சொல்கிறேன் என்று விடைபெற்று வந்த மஹிமா, தன் அறைக்குள் நுழைந்து இன்னும் மூன்று மாதத்தில் தனக்கு கணவனாகப் போகிற, கனடாவில் டெபுடேஷனில் உள்ள சகாதேவை போனில் அழைத்து துபாய் செல்ல வேண்டிய நெருக்கடியைச் சொல்கிறாள். சகாதேவ் சம்மதம் சொல்லிவிட, மனசில் நிம்மதி ரங்கோலி போட எம்.டி அறைக்கு செல்ல எழுந்தவள்... தான் ‘ஷட் டவுன்’ செய்துவிட்டுப் போன கணினியைப் பார்க்கிறாள்... அதிர்கிறாள்.
மஹிமா உடம்பின் சகல திசைகளிலும் அதிர்ந்துபோனவளாய் கணினித் திரையில் மெதுவாய் நகர்ந்துகொண்டிருந்த வாசகங்களை நிலைத்த விழிகளோடு பார்த்தாள். மீண்டும் படித்தாள்.
மஹிமா!