இஸ்லாம் மதத்துக்கு மாறி ஷாஃபின் ஜஹான் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார் அகிலாவாகப் பிறந்த ஹாதியா. இவரது மதமாற்றமும் திருமணமும் வற்புறுத்தி நடத்தப் பட்டவை என்று நீதிமன்றங்களில் கூறப்பட்டது. திருமணம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் மதமும் திருமணமும் தான் விரும்பித் தேர்ந்தெடுத்தவை என்பதை உறுதியாக உரக்கக்
கூறினார் ஹாதியா. இப்போது இவரது திருமணம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துவிட்டது. எதற்கும் அஞ்சாமல் ‘என் திருமணம், என் உரிமை!' எனத் தன் உரிமையைப் போராடி வென்றெடுத்த ஹாதியா ஒரு முன்மாதிரி ஆகியிருக்கிறார்!