யாருக்கான நாடு இது?


ஒரு கொலை ஒட்டுமொத்த நாட்டின் மனசாட்சியையும் உலுக்கியிருக்கிறது. தன்னுடைய மரணத்தின் வழி ஒட்டுமொத்த அமைப்பையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி, பழங்குடிகள் வாழ்க்கையை மைய விவாதத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார் மது.

யார் இந்த மது? பாலக்காடு மாவட்டம், அகலி அருகேயுள்ள சிண்டக்கியூரைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் மது (27). கொஞ்சம் மனநலன் குன்றியவர். சிறு வயதிலேயே வீட்டைவிட்டு வெளியேறிவிட்ட மதுவுக்கு அதற்குப் பின் சுண்டக்கி - கொட்டிக்கல் சாலையை ஒட்டிய அடர் வனப் பகுதிதான் வசிப்பிடம் என்றானது. ஒரு குகைக்குள் வாசம் புகுந்த அவர், காட்டில்தான் பெரும்பாலான நேரம் சுற்றிவந்தார்.

ஒரு கடையில் பசிக்காக கொஞ்சம் அரிசி, சமையல் பொடியை எடுத்துவிட்டார் என்று கடந்த வாரம் மதுவைத் தேடி காட்டுக்குள் புகுந்த ஒரு கும்பல், அவரைக் கட்டிவைத்து அடித்தது. கேவலப்படுத்தியது. கூடவே, இந்தக் கொடுமைகளையெல்லாம் ஒரு சாகசமாகக் கருதி செல்ஃபி எடுத்துக்கொண்டது.

x