பி.எஸ்.எடியூரப்பா. தென்னிந்தியாவில் பாஜகவை முதன்முதலில் ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியவர். இப்போது கர்நாடகத்தில் மீண்டும் பாஜகவை ஆட்சிக்குக் கொண்டுவர 75 வயதிலும் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறார்.
ஓராண்டுக்குள் மூன்று யாத்திரைகளை நடத்தியிருக்கிறீர்கள். முழு கர்நாடகத்தையும் ஒரு சுற்று சுற்றிவிட்டீர்கள். மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது?
கர்நாடக வரலாற்றிலேயே யாரும் இப்படிச் சுற்றியது இல்லை. 201 நாட்களில் 28,800 கி.மீ. பயணித்திருக்கிறேன். 224 தொகுதிகளிலும் நான் செல்லாத கிராமங்களே இல்லை. செல்லும் இடமெல்லாம் பிரதமர் மோடிக்குச் செல்வாக்கு இருக்கிறது. அதே நேரம் சித்தராமையா ஆட்சி மீது கோபமும் இருக்கிறது. இந்த ஊழல்வாதிகள் கர்நாடகத்தையே சூறையாடிவிட்டார்கள். மக்கள் மாற்றத்தை விரும்புவதால், நிச்சயம் 150 இடங்களில் வெல்வோம்.
ஆனால் சித்தராமையா, ‘ஊழல் வழக்கில் சிறைக்குப் போய்வந்த எடியூரப்பா ஊழலைப் பற்றி பேசக் கூடாது’ என்கிறாரே?