நெல்லையில் வணிகவரித் துறை துணை ஆணையராகப் பணியாற்றிக்கொண்டே தமிழ் இலக்கியத்தில் ஆழ்தடம் பதித்துவருகிறார் சு.தேன்மொழி.
இவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு கவிதைத் தொகுப்புகள், இரண்டு மொழிபெயர்ப்புத் தொகுப்புகள் ஆகியவை வெளியாகியுள்ளன. கலை வரலாற்று ஆய்வில் தீவிரமாக இயங்கிவரும் இவரது ஆய்வுக் கட்டுரைகள் ‘மணற்கேணி’ ஆய்விதழில் தொடர்ந்து வெளியாகின்றன.
இவருடைய சிறுகதைத் தொகுப்புக்கு அறிமுக உரை அளித்த மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, ‘தமிழின் எதிர்காலம்’ என்று இவரைக் குறிப்பிட்டிருப்பதை வைத்தே தேன்மொழியின் எழுத்தாளுமையின் தாக்கத்தைப் புரிந்துகொள்ளலாம்.
இலக்கிய உலகில் சாதித்துக் கொண்டிருக்கும் தேன்மொழி, தனக்கு மிகவும் பிடித்த பத்து விஷயங்கள் பற்றி பகிர்ந்துகொண்டதன் தொகுப்பு: