'மெய்யழகன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!


நடிகர் கார்த்தியின் ‘மெய்யழகன்’ படத்திற்கான ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

‘96’ படப்புகழ் இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி, அரவிந்த்சாமி உள்ளிட்டப் பலர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘மெய்யழகன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. உறவுகளுக்கு இடையே இருக்கும் அன்பு, சொந்த ஊரின் மீதான பாசம் ஆகியவற்றை இந்தக் கதை பேசியிருந்தது. நடிகர்கள் அரவிந்த்சாமி மற்றும் கார்த்தியின் நடிப்பு பலரது பாராட்டுகளையும் பெற்றது.

நடிகர் சூர்யா- ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படம் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த மாதம் 27 ஆம் தேதி வெளியாகிறது.

x