இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் என்னென்ன?


சென்னை: இந்த வாரம் திரையரங்குகளில் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் குறித்து பார்க்கலாம்.

கடந்த வாரம் நடிகர் விஜயின் ‘GOAT' படம் வெளியாகி திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்த வாரம் என்னென்ன படங்கள் திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாகிறது எனப் பார்க்கலாம். ஓணம் ஸ்பெஷலாக இந்த வாரம் 12ஆம் தேதி டோவினோ தாமஸ், கீர்த்தி ஷெட்டி நடிப்பில் ‘ஏ.ஆர்.எம்.’ படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படம் தமிழில் டப் செய்து ரிலீஸ் ஆகிறது.

விஜய் மில்டன் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘கோலிசோடா’ மற்றும் ‘கோலிசோடா2’. இந்தப் படங்களின் தொடர்ச்சியாக ‘கோலிசோடா- ரைசிங்’ வெப்சீரிஸ் உருவாகி இருக்கிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘ரகு தாத்தா’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் செப்டம்பர் 13 ஆம் தேதியும், ’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கழித்து ஆஹா மற்றும் பிரைம் ஆகிய இரு ஓடிடி தளங்களில் நாளை மறுநாள் வெளியாகிறது.

சோனி லிவ் ஓடிடி தளத்தில் மலையாளத் திரைப்படமான ‘தலவன்’, நெட்பிளிக்ஸில் ’மிஸ்டர் பச்சன்’, ’ஆய்’ (Aay) ஆகிய படங்களும், இந்தியில் ’கபாலி ரெக்கார்ட்ஸ்’ என்ற திரைப்படம் நாளை ஜியோ சினிமாவில் வெளியாகிறது.

A post shared by Hindu_Tamil (@hindu_tamil)

x