ஓடிடியில் வெளியாகும் நடிகை கீர்த்தி சுரேஷின் ‘ரகு தாத்தா’: எப்போது தெரியுமா?


சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘ரகு தாத்தா’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது.

இந்தி திணிப்புக்கு எதிராக பெண்ணியம் பேசும் பெண்ணாக கயல்விழி என்ற கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த திரைப்படம் ‘ரகு தாத்தா’. கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது. சுமன் குமார் இயக்கத்தில் நடிகை கீர்த்தியுடன் எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி உள்ளிட்டப் பலர் நடித்திருந்தனர். படம் வெளியாகி ஒரு மாதம் கடந்த நிலையில், ஓடிடி தளத்தில் ’ரகு தாத்தா’ எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

ஜீ5 ஓடிடி தளத்தில் செப்டம்பர் 13ஆம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது கன்னடத்திலும் இந்தப் படம் டப் செய்யப்பட்டு ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது. ‘ரகு தாத்தா’ படத்திற்குப் பிறகு இந்தியில் ‘ஜான் பேபி’ படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

x