ஓடிடியில் வெளியானது ‘ராயன்’ - ரசிகர்கள் உற்சாகம்


நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

’ப.பாண்டி’ படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ் இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கும் இரண்டாவது படம் ‘ராயன்’. நடிகராக அவருக்கு ஐம்பதாவது படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. ரசிகர்களிடையே ராயன் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்திருந்தாலும் வசூல் ரீதியாக இந்தப் படம் ரூ. 100 கோடியைக் கடந்தது. தனுஷூடன் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் உள்ளிட்டப் பலர் இதில் நடித்திருக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வாட்டர் பாக்கெட், உசுரே நீதானே ஆகிய பாடல்கள் யூடியூப் தளத்தில் பல மில்லியன் பார்வைகளையும் இன்ஸ்டாவில் இளைஞர்கள் மத்தியிலும் டிரெண்டானது. ’ராயன்’ திரைப்பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸூக்கு லாபகரமானதாக மாறியதால் நேற்று நடிகர் தனுஷை அழைத்து நடிப்பு - இயக்கம் என இரண்டு செக் கொடுத்து பாராட்டி இருந்தார் கலாநிதி மாறன். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் பார்க்கத் தவறியவர்களும் மீண்டும் படம் பார்க்க வேண்டும் என்று விரும்புவர்களும் ஓடிடி தளத்தில் பார்க்கலாம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

x