சர்வதேச அளவிலான முன்னணி ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தனது விளம்பர அடிப்படையிலான வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
ஓடிடி உலகில் எழுந்திருக்கும் போட்டிகள், பிராந்திய ஓடிடி தளங்களின் அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் உலகின் முன்னணி ஓடிடி தளமாக இருந்த நெட்ஃபிளிக்ஸ் தற்போது தள்ளாட்டத்தை எதிர்கொண்டுள்ளது. இந்த நெருக்கடியிலிருந்து விடுபட விளம்பர அடிப்படையிலான சந்தா திட்டங்களை அதிகரித்து லாபம் பார்க்கவும் முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படியில் அதிரடி பல்வேறு மாற்றங்களையும் ஒவ்வொரு நாடாக மேற்கொண்டு வருகிறது.
விளம்பரமில்லா பேசிக் பிளான் திட்டத்தை இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டிலிருந்து, அது நடைமுறையில் உள்ள கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ரத்து செய்ய நெட்ஃபிளிக்ஸ் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் விளம்பரமில்லா திட்டங்களின் சந்தா தொகை அங்கு கணிசமாக உயருகின்றன. அவை சுமார் மூன்றில் ஒரு பங்கு என்றளவுக்கு உயர்வு காண்கின்றன.
கடந்த ஆண்டே புதிய வாடிக்கையாளர்களுக்கு பேசிக் பிளான் இல்லை என நெட்ஃபிளிக்ஸ் அறிவித்திருந்தது. ஏற்கனவே அந்தத் திட்டத்தில் இருப்பவர்களையும், புதிய திட்டங்களுக்கு இழுக்க முயன்று வருகிறது. கணிசமான கட்டணத்தில் விளம்பரங்களுடன் பெறும் பேசிக் திட்டத்தில் மாற்றமின்றி தொடர நெட்ஃபிளிக்ஸ் அனுமதித்துள்ளது.
நெட்ஃபிளிக்ஸின் விளம்பர அடிப்படையிலான திட்டங்கள் தற்போதைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிகோ மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட தேசங்களில் கிடைத்து வருகின்றன. இந்திய சந்தையின் போட்டிகள் மற்றும் கூடுதல் சந்தாதாரர்கள் என்ற இலக்கை அடைவது உள்ளிட்டவற்றுக்காக இங்கு அதிரடிகளை குவிக்க நெட்ஃபிளிக்ஸ் தயங்கி வருகிறது. பெரும்பாலானோர் மொபைல் போன் வாயிலாகவே ஓடிடி தளங்களை ரசிப்பதால், கணிசமான பேசிக் கட்டணத்தில் இந்திய ரசிகர்களை விளம்பரமில்லா திட்டத்தில் அனுமதித்து வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
நான் சாகும் வரை முஸ்லிம் தான்... நடிகை குஷ்பு உணர்ச்சிகர பதிவு!
நடிகர் விஜய் ரகசிய ஆலோசனை... நெருங்கும் தேர்தல்... பரபரக்கும் அரசியல் களம்!
போதையில் காதலனை 108 முறை குத்திக் கொன்ற இளம்பெண்!
கங்கையில் மூழ்கடித்து 5 வயது குழந்தை கொடூரக் கொலை: மூடநம்பிக்கையால் பெற்றோர் வெறிச்செயல்!
டெல்லியில் 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் குளிர்... மூடுபனியால் ஆரஞ்சு அலர்ட்!