வடமாநில தொழிலாளர்களின் வாழ்க்கையை பேசும் ‘ரயில்’: ஆகஸ்ட் 2-ல் ஓடிடியில் ரிலீஸ்


சென்னை: வட மாநில தொழிலாளர்களின் வாழ்க்கையை பேசும் ‘ரயில்’ திரைப்படம் ஆகஸ்ட் 2-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படம் 12 நிமிடம் குறைக்கப்பட்டு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 21-ம் தேதி எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியானது ‘ரயில்’ திரைப்படம். ‘வடக்கன்’ என தலைப்பிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை வாரிய அதிகாரிகளால் பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தப்பட்டது. இதனால் ‘ரயில்’ என படத்தின் தலைப்பு மாற்றப்பட்டது.

படத்தில் குங்குமராஜ், வைரமாலா, ரமேஷ் வைத்யா, பர்வேஸ் மெஹ்ரூ, சமிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிஸ்கவரி சினிமாஸ் சார்பில் மு.வேடியப்பன் படத்தை தயாரித்துள்ளார். எஸ்.ஜே.ஜனனி படத்துக்கு இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினையை பேசிய இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி ஆஹா ஓடிடியில் இப்படம் வெளியாகிறது. கூடுதல் அப்டேட்டாக, திரையரங்குகளில் வெளியான நீளத்தில் இருந்து 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டு ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

x