பிக்பாஸ் தமிழ் 6-வது சீஸனில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் அறிவிக்கப்பட்டது முதலே பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறி கிடக்கிறது. நேற்றைய முதல் எவிக்ஷனுக்கு ராம் ஆளாக, இரண்டாவது நபர் இன்று வெளியேற இருக்கிறார். அவர் யார் என்பதுதான் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியிலான தற்போதைய எதிர்பார்ப்பு.
ரசிகர்கள் வழங்கும் வாக்குகளின் அடிப்படையில், குறைந்த வாக்குகள் பெற்றோர் வாரந்தோறும் வெளியேற்றம் காண்கிறார்கள். இந்த வார எவிக்ஷனுக்கு அசீம், ஜனனி, கதிரவன், ஏடிகே, ஆயிஷா, ராம் ஆகியோர் தேர்வாகி இருந்தனர். இவர்களில் குறைந்த வாக்குகள் பெற்றிருந்த ராம் நேற்று வெளியேறினார். இரட்டை எவிக்ஷனில் அடுத்து விழும் விக்கெட் இன்று அறிவிப்பாக இருக்கிறது.
வாக்குகள் அடிப்படையில் பார்க்கும்போது, அசீம் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார். கமல் மற்றும் பார்வையாளர்கள் அறிவுறுத்தியதை அடுத்து ஜனனி இறங்கி விளையாட ஆரம்பித்திருக்கிறார். அப்படியே இல்லையென்றாலும், ஜனனிக்கான ஆர்மி அவ்வளவு எளிதில் அவரை கைவிடாது. அட்டகாசமாக ஆட்டம்போட்டதில் இந்த வாரம்தான் கதிரவன் ரசிகர்கள் நெஞ்சில் நெருக்கமாக இடம் பிடித்தார். ராம் நேற்று வெளியேறியதில் மிச்சமிருக்கும் ஏடிகே மற்றும் ஆயிஷா ஆகிய இருவரில் ஒருவர் இன்று வெளியேற்றப்படவே வாய்ப்பு உள்ளது.
பாட்டு முதல் அசீம் உடனான ஃபைட் வரை ஏடிகே எகிறி அடித்து விளையாடுகிறார். அவருடன் ஒப்பிடுகையில் ஆயிஷாவின் விளையாட்டு ஆட்டம் கண்டிருக்கிறது. அவ்வப்போது வம்பளப்பதற்கு அப்பால் ஆயிஷா இறங்கி விளையாட மறுக்கிறார். அவரது சுபாவமும் அதற்கு இடம் கொடுப்பதாக இல்லை. வெளியே வாக்களர் மத்தியில் இயங்கும் ஆயிஷா ஆர்மியும் பலவீனமாக உள்ளது. எனவே ஏடிகே, ஆயிஷா இருவரில் ஆயிஷா வெளியேறவே வாய்ப்புகள் அதிகம் தென்படுகின்றன.
இந்த கணிப்புகளுக்கு அப்பால் மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பது இன்றிரவு தெரிந்துவிடும்.