ஜூலை 26  முதல் ஹாட் ஸ்டாரில் ‘சட்னி - சாம்பார்’


ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர், ‘சட்னி - சாம்பார்'. யோகி பாபு நடித்துள்ள முதல் வெப் தொடரான இதில் வாணி போஜன், 'கயல்' சந்திரமவுலி, நிதின் சத்யா, சார்லி, குமரவேல், காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த வெப் தொடர், ஹாட் ஸ்டார் தளத்தில் வரும் 26-ம் தேதி வெளியாகிறது. காமெடி, சென்டிமென்ட் கலந்த இந்த வெப் தொடரின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

x