யூடியூப் டிரெண்டிங்கில் துருவ் விக்ரம் பாடிய ராப் பாடல்!


துருவ் விக்ரமின் ராப் பாடல் வீடியோ முகப்பு

விக்ரம், துருவ் விக்ரம் இணையும் மகான் திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, யூடியூபில் வெளியான பிரத்யேகப் பாடல், யூடியூப் மியூசிக் ட்ரெண்டிங் வீடியோக்களின் வரிசையில் இடம்பிடித்துள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் - துருவ் விக்ரம் என அப்பா - மகன் கூட்டணி சேரும் ஆக்‌ஷன் திரைப்படமாக ’மகான்‘ தயாராகி உள்ளது. 3 மொழிகளில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் கதை, நெட்ஃபிளிக்ஸில் வெளியான பிரபல வலைத்தொடர் ஒன்றின் பாதிப்பில் உருவாகி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

பாபி சிம்ஹா, வாணி போஜன், சிம்ரன், சனந்த் உள்ளிட்டோர் உடன் நடித்திருக்கும் மகான் திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்ய, ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டைக் காட்சிகளை தினேஷ் சுப்பராயன் வடிவமைத்துள்ளார்.

மகான் திரைப்படம், நேரடி ஓடிடி வெளியீடாக நாளை(பிப்.10), அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இதை முன்னிட்டு, ’மிஸ்ஸிங் மி?’ என்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர். ஆங்கிலமும் தமிழும் கலந்த ராப் பாடலை துருவ் விக்ரம் பாடியுள்ளார். இந்த ராப் பாடலின் மூலமாக நடிகர் துருவ் விக்ரம், பாடகராகவும் தனி கணக்கைத் தொடங்குகிறார். ’மிஸ்ஸிங் மீ’ ராப் பாடலுக்கான தமிழ் வரிகளை விவேகா எழுத, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். சோனி நிறுவனத்தின் அதிகாரபூர்வ சேனலில் வெளியாகி இருக்கும் இந்த இசை வீடியோ, யூடியூப் மியூசிக் டாப் ட்ரெண்டிங் வீடியோக்களில் இடம் பிடித்திருக்கிறது.

x