நேரடி ஓடிடி வெளியீடு, திரையரங்கு மார்க்கமாக ஓடிடியில் தஞ்சம் அடைபவை என தமிழ் மற்றும் தெலுங்கில் இன்று(ஜன.7) வெளியாகும் திரைபடங்கள் இங்கே:
ஹிப்ஹாப் ஆதி இரு வேடங்களில் தோன்றும் ’அன்பறிவு’ திரைப்படம் நேரடி ஓடிடி வெளியீடாக ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகி உள்ளது. சத்யஜோதி தயாரிப்பு, அட்லியின் உதவி இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கம், நட்சத்திரக் கூட்டம் என இந்த வார ஓடிடி படங்களில் அன்பறிவு அதிக கவனம் பெற்றிருக்கிறது.
தியேட்டரில் வெளியாகி பின்னர் ஓடிடிக்கு வரும் திரைபடங்களின் வரிசையில், வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்த 'ஜெயில்' திரைப்படம் டென்ட்கொட்டாய் தளத்தில் வெளியாகிறது. இது ஏற்கனவே அமேசான் பிரைம் வீடியோவில் காணக்கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியான தெலுங்கு 'புஷ்பா' திரைப்படம், அமேசான் பிரைம் வீடியோவில் இன்று இரவு வெளியாகிறது. இந்த வரிசையில் 'வருடு காவலேனு' என்ற தெலுங்கு ரொமான்ஸ் திரைப்படம் ஜீ 5 ஓடிடி தளத்திலும், 'லக்ஷயா' என்ற ஆக்ஷன் திரைப்படம் ஆஹா தளத்திலும் வெளியாகின்றன.