புதுச்சேரி: புதுச்சேரி அதிமுக அலுவலகத்தில் சாரைப் பாம்பை வனத்துறையினர் பிடித்தனர்.
புதுவை மாநிலம் உப்பளம் சாலையில் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. அதிமுக-வினர் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் முடித்துவிட்டு அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது அங்கு பொருட்களை வைத்திருக்கும் அறையின் ஜன்னலில் பாம்பு இருந்துள்ளது. இதனை கண்ட அதிமுக-வினர் அங்கிருந்து ஓடினர்.
அதையடுத்து நிர்வாகிகள், வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வன ஊழியர் சண்முகம் வந்து சாரைப் பாம்பை பிடித்தார். பின்னர் சாக்கு பையில் அடைத்து பாம்பை கொண்டு சென்றார்.