சென்னையில் மலர் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்!


சென்னை செம்மொழி பூங்காவில் தோட்டக்கலை சார்பில் அமைக்கப்பட்டுள்ள 4வது மலர் கண்காட்சியை இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இன்று ஜனவரி 2ம் தேதி தொடங்கும் இந்த மலர் கண்காட்சியில் 50 வகையான மலர்கள் பூத்துக் குலுங்கும் வகையில் 30 லட்சம் பூந்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெற்ற போது மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்து வந்த நிலையில் இந்த வருடமும் லட்சக்கணக்கான மக்கள் மலர் கண்காட்சியை பார்வையிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று ஜனவரி 2ம் தேதி முதல் ஜனவரி 18ம் தேதி வரை இந்த மலர் கண்காட்சி நடைபெறும் என்றும் தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் மலர் கண்காட்சியைப் பார்வையிட்டு ரசிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.150 மற்றும் சிறியவர்களுக்கு ரூ.75 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் கடந்த வருடம் பெரியவர்களுக்கு நுழைவு கட்டணமாக ரூ.50 நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வருடம் நுழைவு கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டது குறித்து பொதுமக்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.

x