தமிழ் கலாச்சாரப்படி தைவான் பெண்ணை திருமணம் செய்த காரைக்குடி இளைஞர்


காரைக்குடியில் நடைபெற்ற சதீஷ்குமார் - ஹோ ஹசின்ஹீய் திருமணம்.

காரைக்குடி: தமிழ் கலாச்சார முறைப்படி, தைவான் நாட்டு பெண்ணை காரைக்குடி இளைஞர் திருமணம் செய்துகொண்டார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பாதரக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம், அமுதா தம்பதியின் மகன் சதீஷ்குமார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தைவான் நாட்டில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அப்போது, இவருக்கும் அந் நாட்டைச் சேர்ந்த மற்றொரு நிறுவனத்தில் பணிபுரிந்த ஹோ ஹசின்ஹீய் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

தற்போது, சதீஷ்குமார் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் நேற்று காரைக்குடியில் சதீஷ்குமார், ஹோ ஹசின்ஹீய்யை திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணம் தமிழக கலாச்சார முறைப்படி மங்கல வாத்தியங்கள் முழங்க உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. தைவான் நாட்டில் இருந்து வந்திருந்த பெண்ணின் உறவினர்கள் வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்றனர்.

x