சென்னை மெட்ரோவில் ரூ.100க்கு ஒருநாள் முழுவதும் பயணிக்கலாம்... அசத்தல் அறிவிப்பு!


சென்னை மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோ ரயிலில் வார இறுதி நாட்களில் ஒரு நாள் சுற்றுலா அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 100 ரூபாய் செலுத்தி சுற்றுலா அட்டை பெற்று, நாள் முழுவதும் மெட்ரோவில் அளவற்ற பயணங்களை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ.தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் நாள்தோறும் 2.60 லட்சம் பேர் முதல் 3 லட்சம் பேர் வரை பயணம் செய்கின்றனர். பயணிகளுக்கு நம்பகத் தன்மை மற்றும் பாதுகாப்பான பயணவசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் அளிக்கிறது. இதன்காரணமாக, மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கிறது.

சென்னை மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட 8 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 2023-ஆம் ஆண்டில் மட்டும் 9.11 கோடி பேர் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரெயில் சேவை மிகவும் உதவிகரமாக இருக்கிறது. மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து விமான நிலையம், புறநகர் ரெயில் நிலையம், பஸ் நிலையம் போன்றவற்றை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் சேவை

இந்த சூழலில், மெட்ரோ ரயில் மூலம் சென்னையின் பல இடங்களுக்கும் ஒரே நாளில் பயணிப்போருக்கு புதிய சலுகையை சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், ரூ.100 செலுத்தி சுற்றுலா அட்டை பெற்று மெட்ரோ ரெயிலில் நாள் முழுவதும் அளவற்ற பயணங்களை மேற்கொள்ளலாம். ஆனால் பயணிகள் ரூ.150 செலுத்தி ரூ.100 சுற்றுலா அட்டை பெறவேண்டும். பயணம் முடித்து அட்டையை திருப்பி கொடுத்தவுடன் ரூ.50 வைப்பு தொகை தரப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

லிவிங் டூ கெதர் வாழ்க்கை... நடிகை இறந்த ஒரே வாரத்தில் சின்னத்திரை நடிகரும் தற்கொலை!

x