கோவை: தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் இருந்து கிழக்கு தொடர்ச்சி மலைக்கு பட்டாம்பூச்சிகள் இடம்பெயர்ந்துள்ளன. ஒவ்வோர் ஆண்டும் பட்டாம்பூச்சிகள் இருமுறை இடம்பெயர்கின்றன. தென்மேற்கு பருவமழைக்கு முன்பாக ஏப்ரல்-மே மாதத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து கிழக்கு தொடர்ச்சி மலைக்கு பட்டாம்பூச்சிகள் இடம்பெயர்வு நடைபெறுகிறது.
அந்தவகையில், கடந்த ஏப்ரல் மாதம் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து கிழக்கு தொடர்ச்சி மலைக்கு பட்டாம்பூச்சிகளின் இடம்பெயர்வை இயற்கை மற்றும்பட்டாம்பூச்சி அமைப்பினர் கண்காணித்தனர்.
இதுகுறித்து, இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பின் தலைவர் பாவேந்தன் கூறியதாவது: கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து கிழக்கு தொடர்ச்சி மலைக்கு பட்டாம்பூச்சிகள் இடம்பெயர்வு நடந்தது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நிகழாண்டில் பட்டாம்பூச்சிகளின் இடம்பெயர்வு நன்றாக இருந்தது. குறிப்பாக டெனாய்ன் துணை குடும்பத்தைச் சேர்ந்தடைகர் மற்றும் குரோ வகையைச்சேர்ந்த ‘புளூ டைகர்’, ‘டார்க் புளூடைகர்’, ‘காமன் குரோ’, ‘டபுள் பேண்டட் குரோ’ ஆகிய பட்டாம்பூச்சி வகைகள் அதிகமாகஇடம் பெயர்ந்ததை காண முடிந்தது.
கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, சத்தியமங்கலம் நோக்கி பட்டாம்பூச்சிகள் இடம்பெயர்ந்து சென்றன. காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரை இடம்பெயர்வு இருந்தது என்றார்.