கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம்... தமிழக அரசு 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு!


கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையம் அமைக்க முதற்கட்டமாக 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ரயில்வே வாரியத்திற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரயில்

சென்னை கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டகளுக்குச் செல்லும் பேருந்துகள் தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கப்பட வேண்டும். அது நகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வசதியாக இருக்கும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் கிளாம்பாக்கத்திற்கு வண்டலூரில் இருந்து புதிய ரயில் வழித்தடத்தை அமைக்க தென்னக ரயில்வேயிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. வழக்கமாக ரயில்வே திட்டங்களை ரயில்வே துறையை நிதி ஒதுக்கி செய்யும். ஆனால், தற்போது இது தமிழகத்திற்கு உடனடியாக தேவை என்பதால் இந்தத் திட்டத்திற்கு சிஎம்டிஏ நிதி ஒதுக்குகிறது.

இந்த திட்டத்திற்கான முதற்கட்ட தொகையாக 20 கோடி ரூபாய் ரயில்வே வாரியத்திற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வழங்கியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக இந்த பணிகளை நிறைவு செய்ய வேண்டும் எனவும், ரயில்வே வாரியத்திற்கு சிஎம்டிஏ கோரிக்கை விடுத்துள்ளது. அடுத்தடுத்து ஆகும் செலவினைக் கணக்கில் கொண்டு மற்ற தொகைகள் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது?! போலீஸார் குவிந்ததால் பதற்றம்!

அயோத்தி ராமர் கோயிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்: மின்னஞ்சலில் மிரட்டல் விடுத்த 2 பேர் கைது!

x