புத்தாண்டு ஆஃபர்... அதிரடியாக தங்கம் விலை சரிவு!


தங்கம்

ஆண்டின் தொடக்கத்தில் விலை உயர்ந்து விற்பனையான தங்கம், நேற்று முதல் விலை குறைந்து விற்பனையாகி வருகிறது. இன்று ரூ.360 குறைந்து சவரன் 46,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம்

தங்கம் விலை நேற்று உயர்ந்து விற்பனையான நிலையில் இன்று கிராமுக்கு 5 ரூபாய் குறைந்துள்ளது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,915 ரூபாயாகவும், ஒரு சவரன் 47,320 ரூபாயாகவும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் 5,870 ரூபாயாகவும், சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 46,960 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

அதேபோல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து, 6,340 ரூபாய்க்கும், சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து, 50,720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி

தங்கம் விலை குறைந்து விற்பனையாகி வரும் நிலையில், வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் குறைந்துள்ளது. கிராம் வெள்ளி 78 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 78,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...


டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது?! போலீஸார் குவிந்ததால் பதற்றம்!

x