சொகுசு காரை விட்டு விட்டு ரயிலில் பயணம்: வைரலாகும் கோடீஸ்வர தொழிலதிபரின் வீடியோ!


ரயிலில் பயணம் செய்த நிரஞ்சன் ஹிராநந்தினி

மும்பையில் கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவர் ரயிலில் பயணம் செய்யும் வீடியோ மில்லியன் கணக்கான பார்வையாளர்களைப் பெற்று வைரலாகிறது.

ரயில்

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தினசரி பயணத்திற்கு ரயிலையே நம்பி உள்ளனர். குறிப்பாக நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் பெரும்பாலானோர் ரயிலில் பயணம் செய்கின்றனர்.

தற்போது மும்பை உள்ளூர் ரயிலில் கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவர் பயணம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் ஹிராநந்தனி, தானே மாவட்டத்தில் உள்ள உல்ஹாஸ்நகருக்கு உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க ரயிலில் பயணம் செய்ததாக அவர் கூறியுள்ளார்.

உள்ளூர் ரயிலின் ஏ.சி பெட்டியில் பயணம் செய்த அவர், மற்ற பயணிகளுடன் பிளாட்பாரத்தில் காத்திருந்து பின்னர் ஏ.சி கோச்சில் ஏறினார். சக பயணிகளுடன் பயணம் செய்து கலந்துரையாடினார்.

“நேரத்தை மிச்சப்படுத்தவும், போக்குவரத்து தொந்தரவைத் தவிர்க்கவும் ரயிலில் பயணம் செய்தேன். இந்த பயணம் ஒரு அற்புதமான அனுபவம்" என்று நிரஞ்சன் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளர்ர. இரண்டு நாட்களுக்கு முன்பு அவரால் வெளியிடப்பட்ட வீடியோ, ஏற்கெனவே மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த காணொலிக்கு நெட்டிசன்கள் பலவிதமாக கருத்திட்டு வருகின்றனர். “எங்கள் நாட்டுக்கு உங்களைப் போன்ற தலைவர்கள் தேவை. நான் உங்களை ஒரு நாள் சந்திக்க வேண்டும்" என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். “இப்போது ரயில் பயணம் அவசியமாகவும் இன்றியமையாததாகவும் மாறிவிட்டது. சாலைகளில் உள்ள குழப்பம், மோசமான சாலைகள், பாதுகாப்பின்மை, போக்குவரத்து சிக்கல்கள் போன்றவற்றால் சொந்த வாகனம் ஓட்டுவது கடினம்" என ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்." உங்கள் பணி மற்றவர்களுக்கு உத்வேகமாக இருக்கும் என்றும் பலர் பதிவிட்டுள்ளனர்.

நகரங்களில் அதிகரித்து வரும் போக்குவரத்து பிரச்சினையைக் குறைக்க பொது போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற நிபுணர்களின் அறிவுரையை செயல்படுத்தியதற்காக ஹிராநந்தனியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


பொங்கல் பரிசு தொகுப்போடு ரூ.3000 வழங்க வேண்டும் - அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை!

கார் மோதியதில் கால்கள் துண்டான தந்தை... உடல் நசுங்கி 10ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு!

x