நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்... தங்கம் விலை குறைந்தது!


தங்கம்

தங்கத்தின் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது. ஆண்டின் தொடக்கத்திலேயே விலை உயர்ந்து விற்பனையானதால் அதிர்ச்சியடைந்த நகைப்பிரியர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இன்று விலை குறைந்துள்ளது.

தங்கம் விலை நேற்று உயர்ந்து விற்பனையான நிலையில் இன்று கிராமுக்கு 5 ரூபாய் குறைந்துள்ளது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,920 ரூபாயாகவும், ஒரு சவரன் 47,360 ரூபாயாகவும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் 5,915 ரூபாயாகவும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 47,320 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

அதேபோல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 6,385 ரூபாய்க்கும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து, 51,080 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி

தங்கம் விலை குறைந்து விற்பனையாகி வரும் நிலையில், வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் குறைந்துள்ளது. கிராம் வெள்ளி 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 80,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...


பொங்கல் பரிசு தொகுப்போடு ரூ.3000 வழங்க வேண்டும் - அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை!

x