24 மணி நேரத்தில் புதிதாக 636 பேருக்குக் கொரோனா: 3 பேர் உயிரிழப்பு!


கொரோனா பரிசோதனை.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 636 பேருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாள் பாதிப்பான 841-ஐ விட குறைவான பாதிப்பாகும். மேலும் கொரோனா பாதிப்புக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு லேசான சரிவைச் சந்தித்துள்ளது. மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் படி, இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 636 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து கொரோனாவால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4394 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இறந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையானது 5,33,364 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 548 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு.

மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,44,76,150 ஆகும். தேசிய அளவில் குணமடைவோரின் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது. அதேவேளையில் இறப்பு விகிதமானது 1.18 சதவீதமாக உள்ளது.

ஜே.என்.1 திரிபுக்கு, இதுவரை 9 மாநிலங்களில் 178 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவாவில் அதிகபட்சமாக 47 பேரும், கேரளாவில் 41 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்த படியாக குஜராத்தில் 36, கர்நாடகாவில் 34, மகாராஷ்டிராவில் 9, ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாட்டில் தலா 4, தெலங்கானாவில் 2 பேர், டெல்லியில் ஒருவர் ஜே.என்.1 திரிபால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

x