பரவி வரும் ஜே.என்1 கொரோனா; இதயத்தை பதம் பார்க்கிறது... ஜப்பானின் பகீர் எச்சரிக்கை!


உலகம் முழுவதும் இப்போது புதிதாகப் பரவிவரும் ஜே.என் 1 கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதய செயலிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என ஜப்பான் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. BA.2.86 அல்லது பைரோலா என்ற ஓமிக்ரான் பாதிப்பில் இருந்து தான் இந்த ஜேஎன் 1 வேரியண்ட் உருவாகியுள்ளது. அமெரிக்காவில் கடந்த செப். மாதம் இந்த புது வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

இந்த புதிய ஜே என் 1 கொரோனா காரணமாக கடந்த சில வாரங்களாக அமெரிக்கா, பிரிட்டன், சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையே கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இதய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா வைரஸ்

ஜப்பானைச் சேர்ந்த உயர்மட்ட ஆராய்ச்சி நிறுவனமான ரைகன் ஆய்வாளர்கள் இது குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் மனிதனின் இதயத்தில் அதிகம் பரவி இதய செயலிழப்பை ஏற்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர். நீண்ட கால கொரோனா பாதிப்பு காரணமாக வரும் காலத்தில் இதய செயலிழப்பு ஏற்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாகவும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

எனினும் ஆறுதல் தரும் விதமாக இதற்கு அறிவியல் பூர்வமான சான்றுகள் இல்லை என்று மறுக்கிறார்கள். ஆனால் நீண்டகால கொரோனா பாதிப்பு நேரடியாக இதயத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்பதற்கு இன்னும் உறுதியான ஆதாரம் இல்லை என்றாலும், மனித இதய திசு மாதிரியைப் வைத்து நடத்தப்பட்ட இந்த சோதனையில் இதற்கான வாய்ப்பு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இப்போது பரவும் கொரோனா பாதிப்பு என்பது அதிகப்படியான இதயப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இது உலகளாவிய சுகாதார பிரச்சினையை ஏற்படுத்தும்" என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

x