கடந்த சில தினங்களாக அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, இன்று விலை குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.280 குறைந்து 47,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் நகை வாங்குவோர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தனர்.குறிப்பாக, கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் சவரனுக்கு 960 ரூபாய்க்கும் மேல் தங்கத்தின் விலை உயர்ந்தது. இதனிடையே இன்று வர்த்தகம் துவங்கியதும் தங்கத்தின் விலை மேலும் சரிவைச் சந்தித்தது.
நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,945 ரூபாயாகவும், ஒரு சவரன் 47,560 ரூபாயாகவும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் 5,910 ரூபாயாகவும், சவரனுக்கு 260 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 47,280 ரூபாயாகவும் விற்பனையாகிறது.
அதேபோல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து, 6,380 ரூபாய்க்கும், சவரனுக்கு 260 ரூபாய் குறைந்து, 51,040 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தை போலவே வெள்ளியும் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் 30 காசுகள் குறைந்து 79.70 ரூபாயாகவும் ஒரு கிலோ வெள்ளி 79,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில், நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தங்கத்தின் விலை கணிசகமாக குறைந்துள்ளது.