மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு!


திரௌபதி முர்மு

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து இந்த மசோதாவை, மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டு உள்ளது.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா, சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து அந்த மசோதாவை ஜனாதிபதிக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவுக்கு தற்போது ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து, அதனை அரசிதழில் மத்திய சட்டத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x