தடை நீக்கம்... கும்பக்கரை அருவியில் குளிக்கலாம் வாங்க! சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!


கும்பக்கரை அருவி

கடந்த 9 நாட்களாக நீர்வரத்து அதிகரிப்பினால் கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் விதித்திருந்த தடை இன்று நீக்கிக்கொள்ளப்பட்டது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கும்பக்கரை அருவி செல்லும் வழி

.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறையினர் கடந்த 9 நாளாக தடை விதித்தனர்.

இதனால் விடுமுறை தினத்தை உற்சாகமாக கழிப்பதற்காக கும்பக்கரை வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், அருவியல் நீர்வரத்து குறைந்து சீராக உள்ளதாக கூறி இன்று காலை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதித்தனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் கும்பக்கரை அருவிக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், கும்பக்கரை அருவியில் மேலும் நீர்வரத்து அதிகரித்து மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழ்நிலையில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புடன் அருவியில் குளிக்குமாறும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

x