இன்றோடு சலுகை கடைசி... விமான டிக்கெட் எடுத்தால் சேவை கட்டணம் ரத்து!


ஐஆர்சிடிசி இணையதளத்தில், விமான டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு இரண்டு நாட்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சேவை கட்டணம் தள்ளுபடி சலுகை இன்றுடன் முடிகிறது

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும், ஐஆர்சிடிசி இன்று தனது 24வது நிறுவன தினத்தை இன்று கொண்டாடுகிறது. மேலும், சர்வதேச சுற்றுலா தினமும் வருவதால், பயணிகளுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது.

ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலி வாயிலாக சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு சேவைக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது. நேற்று தொடங்கிய இந்த சலுகை இன்றுடன் முடிவடைகிறது. இந்த சேவைக் கட்டண தள்ளுபடி மட்டுமின்றி, பல்வேறு வங்கிகளின், 'டெபிட், கிரெடிட்' கார்டுகள் வாயிலாக பரிவர்த்தனை செய்தாலும், 2000 ரூபாய் வரை சேமிப்பு பெற முடியும்.

இந்த சலுகையானது, தங்கள் பயணத்தை, 100 நாட்களுக்கு முன்பே திட்டமிட்டுள்ளவர்கள், பண்டிகை காலத்தில் விமானத்தில் பயணம் செய்ய விரும்புவோருக்கு உதவியாக இருக்கும் www.air.irctc.co.in என்ற இணையதளத்தில், விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

இந்த இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படும், ஒவ்வொரு விமான டிக்கெட்டுக்கும், 50 லட்சம் ரூபாய் வரை பயண காப்பீடும் உண்டு என்று ஐஆர்சிடிசி சுற்றுலா பிரிவின் தென்மண்டல துணை பொதுமேலாளர் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.

x