வேகமாக பரவும் கொரோனா; எச்சரிக்கையாக இருக்கவேண்டும் - சௌமியா சுவாமிநாதன் அறிவுறுத்தல்!


செளமியா சுவாமிநாதன்

இப்போது பரவுவது கொரோனாவின் திரிபு தானே தவிர, தேவையின்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை. இருப்பினும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, பாதுகாப்பாக இருக்கவேண்டும் என உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, நாட்டில் வியாழக்கிழமை நிலவரப்படி 640 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 2,997 ஆகப் பதிவாகியுள்ளது. இந்தநிலையில் கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 265 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் பரிசோதனை, பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த சூழலில் இது குறித்துப் பேசிய சௌமியா சுவாமிநாதன், “ கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு தோன்றுவது குறித்து அச்சம் அதிகரித்துவருகிறது. ஆனால் இது கொரோனாவின் திரிபு தானே தவிர, தேவையின்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை. இருப்பினும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, பாதுகாப்பாக இருக்கவேண்டும்.

கொரோனா பரிசோதனை

பொதுஇடங்களுக்குச் செல்லும் முதியவர்கள் முகக்கவசம் அணியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதுபோல உடல்ச்சோர்வு, காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்தால் உடனே மருத்துவனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ளுங்கள்” எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம்... உயர் நீதிமன்றம் அதிரடி!

x