மக்களே உஷார்... தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் கொரோனா: எச்சரிக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்!


கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்திலிருந்து இரட்டை இலக்கத்திற்கு மாறியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மக்கள் தொடர்புத்துறை தனியார் மருத்துவமனை இணைந்து பத்திரிக்கையாளர்களுக்கு சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டார்.

கொரோனா பரிசோதனை

பின்னர், கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் மீண்டும் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருவது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேள்வியெழுப்பட்டது. அதற்கு, " தமிழகத்தில் கடந்த 7-8 மாதங்களாக ஒற்றை இலக்கத்தில் மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்தது. தற்போது தான் 2 இலக்கத்தில் 20, 22 என்ற வகையில் வந்து கொண்டிருக்கிறது. சிங்கப்பூர் போன்ற இடங்களில் 3000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் இருந்தது.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை கர்ப்பிணி தாய்மார்கள், வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், இணை நோய் உள்ளவர்கள் இவர்களெல்லாம் பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...


திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி | நாளை முதல் 4 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் விநியோகம்!

x