ஊட்டியில் சாக்லேட் கண்காட்சி: கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு!


ஊட்டி சாக்லேட் கண்காட்சி

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி ஊட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சாக்லேட் கண்காட்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஊட்டி சாக்லேட் கண்காட்சி

தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஊட்டிக்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்துச் செல்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பலர் வருகை தருகின்றனர்.

குறிப்பாக, விழாக்காலங்கள், விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், கிறிஸ்துமஸ் விழாவுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ளது. அதோடு, புத்தாண்டு கொண்டாட்டங்களும் களைகட்டத் தொடங்கியுள்ளது. இதனால், ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊட்டி சாக்லேட் கண்காட்சி

இதனை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர, சாக்லேட் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் ஹோம்மேட் சாக்லேட் தயாரிப்பு குறித்து செய்முறை குறித்து விளக்கிக் கூறப்படுகிறது.

கண்காட்சியில் பிளாக் சாக்லேட், ஒயிட் சாக்லேட், ரோஸ்டட் ஆல்மண்ட் , ஒயிட் சிடராபரி, நட் மில்க், டார்க் ஆல்மண்ட், பிரூட்டன் நட் , டார்க் பிஸ்தா போன்ற சாக்லேட்களைச் சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர். மேலும், கிறிஸ்துமஸ் புத்தாண்டின் போது சாக்லேட்கள் பரிசாக வழங்க, அவற்றை ஏராளமானோர் வாங்கிச் செல்கின்றனர். அதோடும் பல்வேறு ஊர்களுக்கும் ஊட்டி ஹோம்மேட் சாக்லேட் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x