தங்கம் விலை குறைந்தது! நகைப்பிரியர்களுக்கு ஆறுதல்


தங்கம்

கடந்த சில தினங்களாக அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம்

இன்று தங்கத்தின் விலை கணிசமாக குறைந்துள்ளது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,835 ரூபாயாகவும், ஒரு சவரன் 46,680 ரூபாயாகவும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் 5,825 ரூபாயாகவும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 46,600 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

அதேபோல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 6,295 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 50,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி

வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து 80.70 ரூபாயாகவும் ஒரு கிலோ வெள்ளி 80,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில், நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தங்கத்தின் விலை கணிசகமாக குறைந்துள்ளது.

x