கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக 640 சிறப்பு பேருந்துகள்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!


அரசு பேருந்துகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை விடப்பட உள்ள நிலையில், பயணிகளின் வசதிக்காக 640 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் வருகிற டிசம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னை மற்றும் பிற ஊர்களில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்ப திட்டமிட்டு வருகின்றனர். இதே போல் அரையாண்டு தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு 10 நாட்கள் வரை விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது. இதனால் சுற்றுலா மற்றும் சொந்த ஊர்களுக்கு செல்லவும் பலரும் திட்டமிட்டு வருகின்றனர்.

பயணிகள்

இவர்களின் வசதிக்காக இவ்வாண்டு 640 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 22-ம் தேதி கூடுதலாக 350 பேருந்துகளும், 23-ம் தேதி கூடுதலாக 290 பேருந்துகளும் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவில், மார்த்தாண்டம், தூத்துக்குடி, வேளாங்கண்ணி மற்றும் இதர ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

பேருந்து நிலையம்

இதே போல் பிற நகரங்களில் இருந்து சென்னைக்கும், தென் மாவட்டங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தற்போது தென் மாவட்டங்களில் கனமழை ஓய்ந்து, வெள்ளம் வடிந்து வரும் நிலையில், உறவினர்களை நேரில் சென்று பார்க்கவும் பலரும் முடிவு செய்துள்ளதால், தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

x